காதல்
காதல்
-------------
காதலும்
கடவுளும் ஒன்று.
ஆக்கல்,
காத்தல்,
அழித்தல்
காதலும் செய்யும்.
சிலருக்கு காதல்
இதயத்தில்
உறையும் வாசம்.
பலருக்கு
கவர்ச்சி அணியும்
முகக் கவசம்.
வெற்றி பெற்றோர்
தோற்பதும்
தோற்றவர் வெல்வதும்
காதலில் மட்டுமே.
தோற்ற காதல்
காவியமாவது போல்
வென்ற காதல்
பேசப்படுவதில்லை.
பிரிந்தாலும்
இணைந்தாலும்
மறையாதது
காதல்.
உயிரோடு
கலந்து விடும்
அமுதம் காதல்.
சில நேரங்களில்
உயிர் நீக்கும்
விசமுமாக.
- கமலநாதன்.
Comments
Post a Comment